ADDED : ஜூன் 07, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட துணைத் தலைவர் குருசாமி தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். சட்ட ஆலோசகர் பாலமுருகன் வரவேற்றார்
கூட்டத்தில் எம்.எல்.ஏ., கார்த்திக், மாநில செயலாளர் முத்துக்குமார், விவசாய சங்க தலைவர் ராமச்சந்திர ராஜா, மாவட்ட செயலாளர் முனியசாமி, இணை செயலாளர் அருண் பாண்டியன் பேசினர்.
கூட்டத்தில் மாவட்ட உதவி தோட்டக்கலை அலுவலர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை மறுபரிசலனை செய்வது மற்றும் அலுவலர்களின் பல்வேறு பிரச்சனைகள், வளர்ச்சிகள், விவசாயிகளின் நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது
