ADDED : ஜூலை 09, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் துாய்மை இந்தியா வாரத்தை முன்னிட்டு மத்திய அரசின் புள்ளியியல் துறை துணை மண்டல அலுவலகத்தினர், வி.வி.வி., பெண்கள் கல்லுாரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
விருதுநகர் மதுரை ரோடு எஸ்.பி.ஐ., வங்கியில் துவங்கிய ஊர்வலம் பழைய பஸ் ஸ்டாண்ட், தேசப்பந்து மைதானம் வரை நடந்தது. பிளாஸ்டிக் ஒழிப்பு, சுகாதார மேம்பாடு குறித்த பதாகைகளை ஏந்தி சென்றனர். தேசிய புள்ளியியல் துணை மண்டல உதவி இயக்குனர் ரெத்தினம், மேற்கு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். புள்ளியியல் அலுவலர்கள் சேதுமகேஸ்வரன், ஜிஷ்ணு தாஸ், தர்மேந்தர் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
