/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருக்கன்குடி கோயிலில் உண்டியல் திறப்பு
/
இருக்கன்குடி கோயிலில் உண்டியல் திறப்பு
ADDED : ஜூன் 27, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடும் பணி நடந்தது.
கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, கோவில் உதவி ஆணையர் (கூ.பொ) சுரேஷ் மற்றும் பரம்பரை அரங்காவலர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடும் பணி நடந்தது.
மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் கோயில் பணியாளர்கள் காணிக்கை பொருட்களை கணக்கிட்டனர். இதில் ரொக்கம் ரூ 50,79, 186, தங்கம் 224 கிராம், வெள்ளி 740 கிராம் இருப்பது தெரிய வந்தது. உண்டியல் திறப்பு முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.