/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தடை புகையிலை பதுக்கல்: ரூ.67.60 லட்சம் அபராதம்
/
தடை புகையிலை பதுக்கல்: ரூ.67.60 லட்சம் அபராதம்
ADDED : செப் 12, 2024 04:15 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் இந்தாண்டு ஜன. 1 முதல் ஆக. 31 வரை வரை தடை புகையிலை விற்பனை, பதுக்கல் செய்த 251 கடைகள், 28 வாகனங்களில் இருந்து 1183 கிலோ 920 கிராம் தடை புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு ரூ.65 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செப். 1 முதல் செப். 7 வரை 9 கடைகள், 1 வாகனத்தில் இருந்து 23 கிலோ 854 கிராம் தடை புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
முதல் முறை தடை புகையிலை விற்பனை செய்தால் ரூ. 25 ஆயிரம் அபராதம், 15 நாட்கள் கடைக்கு சீல், இரண்டாவது முறை ரூ.50 ஆயிரம் அபராதம், ஒரு மாதம் சீல், மூன்றாவது முறை விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் அபராதம், மூன்று மாதம் சீல் வைக்கப்படும்.
மேலும் கடும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.