தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் தட்டுப்பாடு:செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்குவதால் விவசாயிகள் தவிப்பு

மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் தட்டுப்பாடு:செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்குவதால் விவசாயிகள் தவிப்பு

மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் தட்டுப்பாடு:செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்குவதால் விவசாயிகள் தவிப்பு


UPDATED : செப் 22, 2026 03:47 PM

ADDED : செப் 22, 2026 03:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2026 03:47 PM ADDED : செப் 22, 2026 03:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பருவ மழை பெய்து விவசாய பணிகளை மும்முரமாக செய்து வருகின்ற நிலையில், உரங்கள், விதைகள் தட்டுப்பாட்டால் விவசாய பணிகள் தாமதப்படுவதால் தவிக்கின்றனர்.

மாவட்டத்தில் , விருதுநகர், சிவகாசி, சாத்துார், ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி உள்ளிட்ட ஊர்களில் பருவ மழை பெய்ய துவங்கி உள்ளதால் விவசாயப் பணிகள் சுறுசுறுப்பாக நடக்கிறது. ஏற்கனவே நிலத்தை உழுது விதைகள் விதைத்த நிலையில் மழை தாமதத்தால் பணிகள் தடைபட்டது. பின்னர் அடுத்தடுத்து பெய்த மழையால் விவசாயிகள் மீண்டும் நிலத்தை உழுது, மக்காச்சோளம், கம்பு, உளுந்து, பாசி உள்ளிட்ட பயிர்களுக்கான விதைகளை விதைத்துள்ளனர். இந்த நேரங்களில் பயிர்களுக்கு இட, தேவையான உரங்கள் கிடைக்காததால் விவசாயிகள் திணறுகின்றனர்.

வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உரங்களை அரசு வழங்கினாலும் போதுமான இருப்பு இல்லை. இதில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதாலும், ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு மூடை யூரியா என்ற கட்டுப்பாடு இருப்பதால் போதுமான உர மூடைகளை பெற முடிவது இல்லை. மேலும், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் போதுமான உரங்கள் இருந்தும் அவற்றை பதுக்கி செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குகின்றனர். இதன் மூலம் அதிக விலைக்கு விற்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது தவிர கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் உரங்களை வாங்கும் போது தேவையற்ற உயிர் உரங்களை கட்டாயப்படுத்தி விற்கின்றனர். ஒரு யூரியா மூடை 300 ரூபாய்க்கு விற்க அரசு நிர்ணயித்திருந்தாலும், கூடுதலாக காசு கொடுத்துதான் விவசாயிகள் உரங்களை வாங்க வேண்டி உள்ளது.

அருப்புக்கோட்டை,திருச்சுழி, நரிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உரத்தட்டுப்பாடு உள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் எளிதில் கிடைப்பது இல்லை. ஏற்கனவே மழை பொழிவின் தாமதத்தால் விவசாய பணிகள் தள்ளிப்போன நிலையில், தற்போது உரத்தட்டுப்பாடும் இருப்பதால் விவசாயிகள் நொந்து போய் உள்ளனர்.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விவசாயிகளின் பிரச்சனையை முழுமையாக தீர்ப்பது இல்லை. குறிப்பாக உரத்தட்டுப்பாடு, அதிக அளவில் விலை உள்ளிட்டவைகள் காலங்காலமாக தீர்க்க முடியாத பிரச்சனையாக உள்ளது. அரசின் வேளாண்துறை நிலையங்கள் மூலம் விற்கப்படும் உரங்களும் விவசாயிகளுக்கு உடனடியாக எளிய முறையில் கிடைப்பதற்கான வழிகள் இல்லை. ஒரு மூடை யூரியா உரத்தை பெறுவதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் தான் உள்ளது.

விவசாய பணிகள் நடக்கின்ற வேளையில், வேளாண் அலுவலர்களும் தனியார் உரக்கடை நிறுவனங்களும் சேர்ந்து விவசாயிகளை பாடாய்ப் படுத்துகின்றனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செய்வது குறைந்து கொண்டே போகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் : அரசின் முழுமையான திட்டங்கள் எதுவும் விவசாயிகளுக்கு கிடைப்பது இல்லை. கடை கோடி விவசாயிகள் எப்போதும் திண்டாடும் நிலையில்தான் உள்ளனர். விவசாய காலத்தில் உரங்கள், விதைகள் தட்டுப்பாடு தொடர்கதையாகத்தான் உள்ளது. இந்த நேரங்களில் வேளாண் துறை அதிகாரிகள், தனியார் உர நிறுவனங்களுடன் கை கோர்த்து செயற்கை உரத்தட்டுப்பாடுகளை ஏற்படுத்துகின்றனர். தனியார் உர நிறுவனங்களை வேளாண் அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் விதைகள், உரங்கள் தட்டுப்பாடு அதிகமாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த பிரச்சனை அதிகமாக உள்ளது என, புலம்புகின்றனர்.

வேளாண் துறையில் தான் விவசாயிகளின் நலனை காப்பதற்க்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், வேளாண் அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள், களப்பணியாளர்கள் என ஏராளமான பதவிகள் உள்ளன. ஆனால் இவர்கள் யாரும் விவசாயிகளின் முழுமையான பிரச்சனையை, கள நிலவரத்தை அரசுக்கு கொண்டு செல்வது இல்லை.

அரசு விவசாயிகளின் முழுமையான பிரச்சனையை தீர்க்க, ஏக்கர் கணக்கில் விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்களுக்கு ஏற்ப யூரியா மூடைகளை வழங்க வேண்டும், தாமதம் இன்றி எளிமையான முறையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரங்கள், விதைகள் பதுக்கல் மற்றும் கூடுதல் விலைக்கு விற்பதை உடனடியாக கண்காணிக்க வேண்டும். முறைகேடுகளில் ஈடுபடும் உரக்கடைகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் அடிக்கடி கள ஆய்வு செய்ய வேண்டும்.

-----

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us