/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பேனர் பக்கத்திற்கு அதிகரிப்பு *வன விலங்குகளால் விளை நிலங்கள் சேதம் * கட்டுப்படுத்துவதற்கான ஆய்வு தேவை
/
பேனர் பக்கத்திற்கு அதிகரிப்பு *வன விலங்குகளால் விளை நிலங்கள் சேதம் * கட்டுப்படுத்துவதற்கான ஆய்வு தேவை
பேனர் பக்கத்திற்கு அதிகரிப்பு *வன விலங்குகளால் விளை நிலங்கள் சேதம் * கட்டுப்படுத்துவதற்கான ஆய்வு தேவை
பேனர் பக்கத்திற்கு அதிகரிப்பு *வன விலங்குகளால் விளை நிலங்கள் சேதம் * கட்டுப்படுத்துவதற்கான ஆய்வு தேவை
ADDED : பிப் 22, 2025 06:58 AM
ராஜபாளையம்: மாவட்டத்தில் விவசாய சாகுபடி நிலங்களுக்குள் வனவிலங்குகள் தொல்லை அதிகரிப்பதற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தி கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக் வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் பகுதி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி அமைந்துள்ளது.
ஏற்கனவே மேகமலை புலிகள் சரணாலயம் என பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக வனவிலங்குகள் விவசாய சாகுபடி நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது அதிகரித்துள்ளது.
குறிப்பாக காட்டுப்பன்றிகள், யானை, மான், முள்ளம்பன்றி, குரங்கு,மயில், கிளி என பல நுாறு ஏக்கரில் அனைத்து பயிர்களையும் வனவிலங்குகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர்.
தற்போது பயிர்களின் காவலுக்கு என சென்றாலும் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளதுடன் சேதம் ஏற்படும் பயிர்களுக்கான உரிய இழப்பீடும் வழங்கப்படுவதில்லை.
குறிப்பாக காட்டு பன்றிகள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து நெல், வாழை, தென்னை, மா, மக்காச்சோளம், காய்கறிகள் என அனைத்து பயிர்களும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. தொடர் கோரிக்கையால் காட்டு பன்றிகளை மட்டும் சுடுவதற்கு வனத்துறைக்கு அரசு அனுமதி அளித்துள்ளனர்.
வனத்திற்கு வெளியே ஒரு கி.மீ., வரை தானாக வந்து போவதற்கு அனுமதிக்க வேண்டும். அதிலிருந்து மூன்று கி.மீ., வரை வந்துவிட்ட வன விலங்குகளை பிடித்து காட்டுக்கு அனுப்ப வேண்டும்.
4 கி.மீ., வெளியே வந்துவிட்ட பன்றிகளை மட்டும் வனத்துறை சுட்டுக் கொல்லும் என ஏற்றுக்கொள்ள முடியாத அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
முன்பே காட்டு பன்றிகளை சுட்டு கட்டுப்படுத்துவதாக அரசு அறிவித்து வனத்துறை சார்பில் எந்த காட்டுப் பன்றியையும் சுட்டுக் கொல்லவில்லை.
வனத்தை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து விவசாயம் நடைபெற்று வரும் நிலையில் சமீப காலத்தில் மட்டும் மனித விலங்கு மோதல், பயிர்கள் பாதிப்பு யானைகளின் வழித்தடங்களில் தடை கட்டடங்கள், அவற்றை ஈர்க்கும் பழ மரங்கள் சாகுபடி அதிகரிப்பு என உண்மையான காரணத்தை அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதே விவசாயிகளுக்கான நிரந்தர தீர்வாக மாறும்.