/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தடுப்புச்சுவர் சிக்கலுக்கு பதில் பேரிகார்டு: நெடுஞ்சாலையில் விபரீதம்

ADDED : ஜூலை 01, 2024 05:39 AM

ராஜபாளையம், : ராஜபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலை நடுவே தடுப்புச் சுவர் சிக்னல் கம்பம் உடைந்துள்ளதற்கு பதில் பேரி கார்டு வைத்து சாலையை ஆக்கிரமித்துள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலை கொல்லங் கொண்டான் கண்மாய் தளவாய்புரம் விலக்கில் அபாய வளைவு அமைந்துள்ளது.
இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்ததால் வாகனங்கள் முந்துவதை தவிர்க்க சென்டர் மீடியனுக்காக சாலை நடுவே தடுப்பு சுவர் அதன் முன் பகுதியில் சிக்னல் கம்பம் வைக்கப்பட்டது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் லாரி மோதி இதிலிருந்த சிக்னல் கம்பம் உடைந்தது. இதை சரி செய்யாமல் எதிரே வரும் வாகனங்களை எச்சரிக்கும் விதமாக பேரிக்கார்டை ரோட்டில் வைத்துள்ளனர்.
இது குறித்து கணேசன்: ஏற்கனவே திடீர் ரோடு திருப்பமாக உள்ள பகுதியில் வைத்துள்ள பேரி கார்டினால் 10 அடி துாரத்திற்கு ரோட்டின் இருபுறமும் வாகனங்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது.
தற்காலிக ஏற்பாடாக வைத்துள்ளதை பராமரிப்பு செய்யாமல் நிரந்தரமாக மாற்றியுள்ளதால் வாகனங்கள் முந்தும் போது ஒதுங்க வழியின்றி உரசி விபத்து தொடர்கிறது. பெரிய ஆபத்து ஏற்படும் சரி செய்ய வேண்டும்.