ADDED : மே 11, 2024 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்:சாத்துார்மேட்ட மலை பி.எஸ் .என்.எல்.பி.எட்., கல்லுாரி 17வது ஆண்டு விழா நடந்தது. தலைவர் கே.ராஜீ தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாப்பா ராஜீ, செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் சசிகலா சித்ரா செல்வி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நிர்வாக பிரிவு தலைவர் கண்ணதாசன் கலந்து கொண்டார். முதல்வர் ராஜேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார்.
அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாணவ மாணவியர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது. பேராசிரியர் ஜெயசித்ரா நன்றி கூறினார்.