/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டா மாறுதலுக்கு ரூ.6000 பெற்ற பேரையூர் பெண் வி.ஏ.ஓ., கைது
/
பட்டா மாறுதலுக்கு ரூ.6000 பெற்ற பேரையூர் பெண் வி.ஏ.ஓ., கைது
பட்டா மாறுதலுக்கு ரூ.6000 பெற்ற பேரையூர் பெண் வி.ஏ.ஓ., கைது
பட்டா மாறுதலுக்கு ரூ.6000 பெற்ற பேரையூர் பெண் வி.ஏ.ஓ., கைது
ADDED : ஆக 07, 2024 01:29 AM

பேரையூர்:மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சின்னாரெட்டிபட்டி வி.ஏ.ஓ., மீனாட்சி, 47. திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் அருகே மக்காரம்பாறையைச் சேர்ந்தவர் மொகைதீன்ஷெரீப், 37. இவர் 2011ல் தந்தை சர்தார், தாய் மதினா பெயரில் சின்னாரெட்டிபட்டியில் இரண்டு பிளாட்டுகள் வாங்கினார். அப்போது பட்டா வாங்கவில்லை. இந்த பிளாட்டுகளுக்கு ஜூலை 15ல் ஆன்லைன் வாயிலாக உட்பிரிவு பட்டாவிற்கு விண்ணப்பித்தார். வி.ஏ.ஓ., மீனாட்சியை சந்தித்து ஆவணங்களையும் சமர்ப்பித்தார். மொகைதீன் ஷெரீபிடம் இரண்டு பிளாட்களுக்கு 6,000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என மீனாட்சி கேட்டார்.
மொகைதீன் ஷெரீப், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
அவர்கள் ஆலோசனைப்படி, நேற்று மதியம் ரசாயனம் தடவிய 6,000 ரூபாய் நோட்டுகளை சின்னாரெட்டிபட்டி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் மீனாட்சியிடம் ஷெரீப் கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் மீனாட்சியை கைது செய்தனர்.