/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா
/
பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா
ADDED : மே 08, 2024 06:26 AM

சிவகாசி; சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா நடந்தது.
இக்கோயில் பொங்கல் திருவிழா ஏப். 30 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன், காமதேனு வாகனம், கைலாச பர்வத வாகனம், வேதாள வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது.
நேற்று கோயிலில் பொங்கல் திருவிழா நடந்தது. பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
மாலை 5:00 மணி அளவில் குதிரை வாகனத்தில் அம்மன் வேட்டைக்குச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து சிங்க வாகனத்தில் அம்மன் திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று கயர்குத்து திருவிழா நடக்கிறது.

