/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி ரயில்வே மேம்பால பணிக்கு இன்று பூமி பூஜை
/
சிவகாசி ரயில்வே மேம்பால பணிக்கு இன்று பூமி பூஜை
ADDED : ஜூலை 26, 2024 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங் மேம்பாலம் அமைக்கும் பணி இன்று பூமி பூஜையுடன் துவங்க உள்ளது.
சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க ஜன. ல் காணொலி வாயிலாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டது. தொடர்ந்து மேம்பால கட்டுமான பணிக்கு இன்று (ஜூலை 26) மாலை 5:00 மணியளவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பூமிபூஜை செய்து கட்டுமானப் பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இறுதி கட்ட அளவீடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.