/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பா.ஜ., செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது
/
பா.ஜ., செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது
ADDED : ஏப் 17, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசியில் இண்டியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது, படிப்படியாக பா.ஜ.,வினுடைய செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது.
எத்தனை அவதாரங்கள் மோடி எடுத்தாலும் இந்த சரிவிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள முடியாது, ஜனநாயத்துக்கு விரோதமாக செயல்படும் அரசாங்கம், சர்வ அதிகாரியாக செயல்படும் அரசாங்கம், ஜெர்மனியின் ஹிட்லர் இறந்து விட்டார், தற்கொலை செய்து கொண்டார் என்று வரலாறு படித்து கொண்டு இருக்கிறோம். உண்மையிலேயே ஹிட்லர் சாகவில்லை, அந்த ஹிட்லர் தான் மோடி. இவ்வாறு அவர் பேசினார்.

