/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தீப்பெட்டி ஆலையில் பாய்லர் வெடித்து தீ அசம்பாவிதம் தவிர்ப்பு
/
தீப்பெட்டி ஆலையில் பாய்லர் வெடித்து தீ அசம்பாவிதம் தவிர்ப்பு
தீப்பெட்டி ஆலையில் பாய்லர் வெடித்து தீ அசம்பாவிதம் தவிர்ப்பு
தீப்பெட்டி ஆலையில் பாய்லர் வெடித்து தீ அசம்பாவிதம் தவிர்ப்பு
ADDED : பிப் 23, 2025 01:13 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தில் தீப்பெட்டி ஆலையில் மருந்து கலவை செய்யும் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் ஆலையை விட்டு உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சிவகாசி முனீஸ்வரன் காலனியைச் சேர்ந்தவர் ஜாக்லின் கென்னடி 50. இவர் சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தில் வின் எக்ஸிம் மேட்ச் ஒர்க்ஸ் என்ற பெயரில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இங்கு நேற்று மதியம் 12:30 மணிக்கு மருந்து கலவை செய்யும் பாய்லர் வெடித்ததில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறினார். சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் இயந்திரங்கள், தீப்பெட்டி அட்டைகள் மூலப்பொருட்கள் தீயில் எரிந்து வீணாயின. திருத்தங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாய்லர் வெடித்தவுடன் தொழிலாளர்கள் அறையை விட்டு வெளியேறியதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.