/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புத்தக கண்காட்சி விழிப்புணர்வு கலை இலக்கிய போட்டிகள்
/
புத்தக கண்காட்சி விழிப்புணர்வு கலை இலக்கிய போட்டிகள்
புத்தக கண்காட்சி விழிப்புணர்வு கலை இலக்கிய போட்டிகள்
புத்தக கண்காட்சி விழிப்புணர்வு கலை இலக்கிய போட்டிகள்
ADDED : செப் 04, 2024 01:08 AM
விருதுநகர் : விருதுநகரில் நடக்க உள்ள 3வது புத்தக திருவிழாவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: செப்.27 முதல் அக்.7 வரை கே.வி.எஸ்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கிறது.
இதற்கான விழிப்புணர்வுக்கு நடத்தப்பட உள்ள கலை இலக்கிய போட்டிகள் செப். 8 கட்டுரை போட்டிகள், செப். 15 கவிதை போட்டிகள், 21ல் புத்தக குறிப்பு எழுதுதல் போட்டிகளும், 22ல் புத்தக ஆய்வு என்ற தலைப்பில் பேச்சு போட்டிகளும் அனைத்து வட்டங்களிலும் நடக்கிறது.
மக்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தவிர அனைவரும் பங்கேற்கலாம்.
அறிவு சார் மையங்கள் அருப்புக்கோட்டை என்.நடராஜன் (99940 25279), சிவகாசி ராஜா (99940 80713), ஸ்ரீவில்லிபுத்துார் மலர்வேந்தன் (95004 32396), விருதுநகர் வி.செந்தில்குமார் (70109 91170), அரசு பொது நுாலகங்கள் சாத்துார் சு.பாலசுப்பிரமணியன் (97510 42959), ராஜபாளையம் இல.ராமகிருஷ்ணன் (94870 53753), வத்திராயிருப்பு சி.வெள்ளைச்சாமி (99522 43318), வெம்பக்கோட்டை எஸ்.லெனின் (97896 88869), திருச்சுழி சு.பாஸ்கரன் (99442 53609), நரிக்குடி ஜி.ராஜா (98657 69118), காரியாபட்டி பி.சுரேஷ்கண்ணன் (97861 12369) ஆகிய நூலகர்களை போட்டிகள் குறித்து விரிவான தகவல்களை அறிய தொடர்பு கொள்ளலாம், என்றார்.