ADDED : பிப் 15, 2025 05:47 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் மாவட்ட நூலக ஆணைக்குழு, கரிசல் இலக்கிய கழகம், நகர் வளர்ச்சி இயக்கம், மதுரை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில் தேசிய புத்தக கண்காட்சி துவக்க விழா நடந்தது.
நகராட்சி தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமை வகித்தும், நகராட்சி துணை தலைவர் செல்வமணி முன்னிலை வகித்தும் புத்தக கண்காட்சியை திறந்து வைத்தனர்.
நண்பர்கள் ரோட்டரி சங்க தலைவர் பால்ச்சாமி, முன்னாள் தலைவர் அங்குராஜ் முதல் விற்பனையை துவக்கி வைத்தனர்.
ரோட்டரி துணை ஆளுநர் வேலாயுதம், மகாத்மா பள்ளி தாளாளர் முருகேசன், வழக்கறிஞர் சங்க செயலாளர் ஜெயராஜ், இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் கிருஷ்ண மூர்த்தி, மேலாளர் மகேந்திரன் செய்திருந்தனர்.
ஸ்ரீவி நகர் வளர்ச்சி இயக்க தலைவர் சந்திரன் செய்திருந்தனர். செயலாளர் ஜாகீர் உசைன் நன்றி கூறினார். இப்புத்தக கண்காட்சி பிப். 28 வரை நடக்கிறது.

