ADDED : ஆக 25, 2024 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் நூலகத்தில் எழுத்தாளர் கலுசுலிங்கம் எழுதிய ஒன்றே குலம் ஒருவனே தேவன், புது வசந்தம், நட்பு பரிசு ஆகிய 3 புத்தகங்கள் வெளியீட்டு விழா நடந்தது.
முன்னாள் மாவட்ட நீதிபதி சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் மலர், கமிட்டி துணைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்றார்.
புத்தகங்களை வெளியிட்டு கமிட்டி செயலாளர் சண்முகநாதன், புலவர் பாலகிருஷ்ணன், தமிழாசிரியர்கள் சிவனனைந்த பெருமாள், சங்கரலிங்கம், கணேசன் பேசினர். எழுத்தாளர் கலசலிங்கம் ஏற்புரையாற்றினார். ஓய்வு வங்கி அலுவலர் முனியாண்டி நன்றி கூறினார்.

