நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தாவரவியல் திருவிழா நடந்தது.
இயற்கை ஆர்வலர் நவிராஜன் தலைமை வகித்தார். வாழ்க்கைக்கு நஞ்சில்லா உணவு என்ற தலைப்பில் பேசினார். நெல்லிக்காயில் இருந்து சுபாரி, மிட்டாய், தேன் நெல்லிக்காய் ஆகியவற்றை தயாரிக்கும் முறை பற்றி விளக்கினார்.
மாணவிகள் தாங்களே தயாரித்த சிறுதானிய உணவுகள், ஆர்கானிக் உணவு வகைகள், குளிர்பானங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்தி இருந்தனர். கல்லூரி சேர்மன் ராமச்சந்திரன், செயலர் இளங்கோவன், பி.எட்., கல்லூரி செயலர் சங்கர நாராயணன், கல்லூரி முதல்வர் தில்லைநடராஜன், துணைத்தலைவி வெண்ணிலா ஆகியோர் கலந்து கொண்டனர். பேராசிரியை ஜூலியட் நன்றி கூறினார்.

