/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிசுவை அடக்கம் செய்த காதலன் கைது
/
சிசுவை அடக்கம் செய்த காதலன் கைது
ADDED : ஆக 16, 2024 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அருகே பேர் நாயக்கன்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரி 18. அதே பகுதியை சேர்ந்த டிரைவர்பாண்டித்துரையும் 26, இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் தனிமையில் பழகியதில் பாண்டீஸ்வரி கர்ப்பமடைந்தார். ஜூலை 13ல் பாண்டித்துரையிடம் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியதில் ஏற்பட்ட தகராறில் பாண்டித்துரை அவளது வயிற்றில் அடித்தார்.
வயிற்று வலியால் அவதிப்பட்டு ஜூலை 14ல் சிசு பாண்டீஸ்வரி வயிற்றிலிருந்து தானாகவே கீழே விழுந்து இறந்தது. சிசுவை ஜூலை 15 ல் பாண்டித்துரை அடக்கம் செய்தார். சிவகாசி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பாண்டித்துரையை கைது செய்தனர்.

