/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாய்ப்பால் வார விழிப்புணர்வு ஊர்வலம்
/
தாய்ப்பால் வார விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஆக 05, 2024 07:28 AM
சிவகாசி : சிவகாசியில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் சிவகாசி கிளை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மேயர் சங்கீதா துவக்கி வைத்தார்.
சிவகாசி இந்து நாடார் பள்ளியில் துவங்கிய ஊர்வலம் நான்கு ரத வீதிகளின் வழியாக திரும்ப வந்தடைந்தது. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நடந்த இந்த ஊர்வலத்தில் சிவகாசி கிளை இந்திய மருத்துவ சங்கம், இன்னர் வீல் கிளப் ஆப் சிவகாசி, இன்னர் வீல் கிளப் ஆப் சிவகாசி பைரோடவுன், கிளப் ஆப் சிவகாசி கோல்ட், ரோட்டரி கிளப் சிவகாசி டைமண்ட்,ஜெயஸ்ர்ட்டே விங் ஆப் சிவகாசி, ஜே.சி.ஐ., டச்சஸ், அஸ்விகா யோகா நிலையம், பெல் கேட்டரிங் பயிற்சி மாணவர்கள், அருணா நர்சிங் பள்ளி மாணவிகள் ஆகியோர் பங்கேற்றனர்.