ADDED : மே 10, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி அள்ளாலப்பேரியில் முடுக்கன்குளம் கண்மாய்க்கு செல்லும் ஓடையில் வி.ஏ. ஓ., முத்துக்குமார், உதவியாளர் முனீஸ்வரன் நேற்று முன்தினம் காலையில் சென்று பார்த்த போது, அதே ஊரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மாட்டு வண்டியில் மணல் எடுத்தது தெரிந்தது.
மாட்டு வண்டியை பறிமுதல் செய்து காரியாபட்டி போலீசில் ஒப்படைத்தனர். ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போலீசில் வி.ஏ.ஓ., புகார் கொடுத்தார்.