ADDED : ஜூலை 11, 2026 11:40 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார், ஜூலை 12-
நேற்று முன்தினம் மதுரையில் புறப்பட்டு ராஜபாளையம் வந்த பஸ்சில் நத்தம் பட்டியை சேர்ந்த பயணிகள் ஏறிய போது அங்கு பஸ் நிற்காது என கண்டக்டர் மாயக்கண்ணன் கூறியுள்ளார். இரவு 7:00 மணிக்கு நத்தம் பட்டி பஸ் ஸ்டாப் அருகே பஸ் வரும்போது அப்பகுதியினர் வழி மறித்தனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனியார் பஸ்சின் சைடு கண்ணாடி உடைக்கப்பட்டது. டிரைவர் கண்ணன் தாக்கப்பட்டார். நத்தம் பட்டி போலீசார் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
