/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முதல்வர் கோப்பை போட்டி முன்பதிவு செய்ய அழைப்பு
/
முதல்வர் கோப்பை போட்டி முன்பதிவு செய்ய அழைப்பு
ADDED : ஆக 22, 2024 02:15 AM
விருதுநகர்: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2024ம் ஆண்டிற்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான வரும் செப்.,, அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது.
இது குறித்து கலெக்டர் ஜெயசீலனின் செய்திக்குறிப்பு: மாவட்டத்தை சார்ந்த 12 - 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும், 17 - 25 வயது வரை கல்லுாரி மாணவர்களுக்கும், 15 - 35 வயது வரை பொதுப்பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும், அரசு ஊழியர்களான நிரந்தரப் பணியாளர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விவரத்தை http://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவுசெய்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்யலாம்.
மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2ம் பரிசாக ரூ.75 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். போட்டிகளில் பங்கேற்க ஆக. 25க்குள் முன்பதிவு செய்ய வேண்டும். இணையதளம் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகம், 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.