ADDED : ஜூலை 07, 2024 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 91 ஊராட்சிகளில் தோட்டக்கலைத்துறை மூலம் எக்டேருக்கு 75 சதவீத மானியத்தில் ரூ.7500க்கு வீரிய ஒட்டு காய்கறி விதைகள், இடுபொருட்கள் 110 எக்டேர் பரப்பிற்கும், மா, சப்போட்டா, கொய்யா, நெல்லி, எலுமிச்சை, சீத்தா பழச்செடிகள் அடங்கிய தொகுப்பும் பயனாளிகளின் பங்கு தொகையுடன் வினியோகம் செய்யப்பட உள்ளது.
தேவைப்படுவோர் https://tnhorticulture.tn.gov.inல் அல்லது உழவன் செயலியில் பதிவு செய்தோ, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகியும் பயன்பெறலாம், என்றார்.