/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிட்டங்கிகளில் பொருட்களை இருப்பு வைக்க அழைப்பு
/
கிட்டங்கிகளில் பொருட்களை இருப்பு வைக்க அழைப்பு
ADDED : ஆக 30, 2024 05:43 AM
விருதுநகர்: வேளாண் விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி கூறியதாவது: மாவட்டத்தில் 7 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருள்களை உலர வைக்க உலர்களங்கள், பரிவர்த்தனை செய்ய பரிவர்த்தனை கூடங்கள், ஏல நடவடிக்கைகள் செய்ய ஏலக் கொட்டகைகள், விவசாயிகள் வேளாண் விளைபொருள்களை இருப்பு வைத்துக்கொள்ள சேமிப்பு கிட்டங்கிகள், குளிர்பதன கிட்டங்கிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த வேளாண் விளைபொருள்களை 15 நாட்கள் வரை எந்த வித வாடகையில்லாமல் இருப்பு வைத்து பரிவர்த்தனைக் கூடங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
விருதுநகர் விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 18600 மெ.டன் கொள்ளளவு கொண்ட 17 சேமிப்பு கிட்டங்கிகள் உள்ளன. ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ள 15200 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிட்டங்கிகளுக்கு WDRA சான்றிதழ் பெறப்பட்டுள்ளது, என்றார்.