UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 07:36 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் தியாகராஜா மேல்நிலைப் பள்ளியின் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் கோவிந்தன் நகர் காலனியில் நடந்தது.
தலைமை ஆசிரியர் செல்வராணி, காலனி தலைவர் சவுந்தர பாண்டியன், கீழப்பட்டி தெரு நிர்வாகிகள் தலைமை வகித்தனர்.
இதில் காலனி செயலாளார் அசோக்குமார், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளின் தரத்தை பற்றி விளக்கம் அளித்தார். மருத்துவ முகாமில் மக்களுக்கு கண் பரிசோதனை, ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கண்மாய் கரையை பலப்படுத்தும் விதமாக பனை விதைகள் விதைக்கப்பட்டது.
