ADDED : ஆக 26, 2024 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்:
ராஜபாளையத்தில் வள்ளலார் வைத்தியசாலை, சேவா பாரதி, பழையபாளையம் ராஜூக்கள் மகமை பண்டு சார்பில் கேன்சர் சிகிச்சை முகாம் நடந்தது. மகுமை பண்டு துணைத் தலைவர் ராமகிருஷ்ண ராஜா, முன்னாள் தலைவர் தனுஷ்கோடி ராஜா, ஜவுளி வர்த்தக சங்க டிரஸ்டி செங்குட்டுவன் குத்து விளக்கேற்றி துவக்கினர்.
சேலத்தை சேர்ந்த மருத்துவர்கள் மகேந்திரன், ராகவி தேவி தலைமையிலான குழுவினர் மார்பக, கணைய, வாய், நுரையீரல், கர்ப்பப்பை உள்ளிட்ட புற்று நோய்களுக்கு ஆலோசனை, சித்தா, ஆயுர்வேத மருந்துகள், மருத்துவ துறை மூலம் சிகிச்சைக்கான ஆலோசனை வழங்கினர். ஏற்பாடுகளை ஆர்.எஸ்.எஸ்., நகர பொறுப்பாளர்கள் ரவிக்குமார், சுப்ரமணிய ராஜா, ராமசுப்பிரமணியம், சக்தி சங்கர் தலைமையில் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

