/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நடந்து சென்றவர்கள் மீது கார் மோதல்
/
நடந்து சென்றவர்கள் மீது கார் மோதல்
ADDED : ஜூன் 01, 2024 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் திருமேனி, 35, இவருடைய மகள் ராமலட்சுமி, 7, இருவரும் நேற்று முன்தினம் பாலையம்பட்டி அருகே மதுரை -தூத்துக்குடி நான்கு வழி சாலை அருகில் உள்ள தங்கள் தோட்டத்திற்கு சென்று விட்டு, வீட்டிற்கு செல்ல ரோடு ஓரத்தில் நடந்து கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக இருவர் மீது மோதியதில் திருமேனி சம்பவ இடத்தில் பலியானார்.
படுகாயம் அடைந்த ராமலட்சுமி மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.-