/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கட்டுப்பாட்டை இழந்த கார்: இருவர் பலி
/
கட்டுப்பாட்டை இழந்த கார்: இருவர் பலி
ADDED : மார் 27, 2024 01:02 AM

விருதுநகர்:விருதுநகர் ஆவல்சூரன்பட்டி அருகே பஸ்சிற்காக காத்து நின்ற நால்வர் மீது கார் மோதியது. இதில் கார் ஓட்டி வந்த ஜீவாசதீஷ் 34, காத்து நின்றவர்களில் ஒருவரான கஸ்துாரி திலகம் 60, பலியாகினர். மேலும் மூவர் காயமடைந்தனர்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே வீரபெருமாள்புரத்தைச் சேர்ந்தவர்கள் சுப்பாரெட்டி 60. இவரது உறவினர்கள் கஸ்துாரி திலகம் 60, ஜெயலட்சுமி 50, சீதாலட்சுமி 70. இவர்கள் நேற்று மதியம் 2:30 மணிக்கு உறவினர் இறுதி சடங்கில் பங்கேற்று விட்டு வீரபெருமாள்புரம் செல்வதற்காக விருதுநகர் ஆவல்சூரன்பட்டி விலக்கில் நான்குவழிச்சாலையில் பஸ்சிற்காக காத்திருந்தனர்.
அப்போது மதுரை நோக்கி நாகர்கோவில் ஜோன்ஸ் தெருவைச் சேர்ந்த ஜீவாசதீஷ் ஓட்டிவந்த கார் கட்டுபாட்டை இழந்துமோதியதில் சுப்பாரெட்டி, கஸ்துாரி திலகம், ஜெயலட்சுமி, சீதாலட்சுமி காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்விபத்தில் ஜீவாசதீஷ் காருடன் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து பலியானார். மருத்துவமனையில் கஸ்துாரி திலகம் பலியானார். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

