/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாய் பதிப்பதில் கவனம் அவசியம் தேவை முன்னெச்சரிக்கை
/
குழாய் பதிப்பதில் கவனம் அவசியம் தேவை முன்னெச்சரிக்கை
குழாய் பதிப்பதில் கவனம் அவசியம் தேவை முன்னெச்சரிக்கை
குழாய் பதிப்பதில் கவனம் அவசியம் தேவை முன்னெச்சரிக்கை
ADDED : ஆக 13, 2024 12:21 AM
விருதுநகர் : விருதுநகரில் குழாய் பதிக்கும் பணிகளில் கவனமாக செயல்பட்டு அன்றறைக்கே மூடிவிட வேண்டும். இல்லையெனில் விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
விருதுநகரில் புதிய தாமிரபரணி குடிநீர் திட்டத்திற்கான குழாய் பதிக்கும் பணிகள் தந்தி மரத்தெருவில் நடந்து வருகிறது. இதில் அப்பகுதியில் உட்தெருக்களான குறுகிய பகுதிகளில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் 2 நாட்களாக மூடப்படவில்லை. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அளவில் வடிகால், பாதாளசாக்கடை பணிகளுக்காக தோண்டப்படும் குழியில் இரவு நேரங்களில் விழுந்து விபத்தை சந்திப்போர் அதிகம் உள்ளனர்.
இந்நிலை சாத்துார் பாதாள சாக்கடை பணியின் போதும் நடந்துள்ளது. இந்நிலையில் குடியிருப்பு அதிகம் உள்ள தெருக்களில் குழாய் பதிக்கும் போது அன்றன்றைக்கே மூடி சமதளமாக்கும் வகையில் பணிகளை திட்டமிட வேண்டும். இதனால் குடியிருப்போர், முதியவர்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
நேற்றும், நேற்று முன்தினமும் மாலையில் கனமழை பெய்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். குழந்தைகளுக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட முடியாத நிலை ஏற்பட்டது. பெண்கள் நடமாட சிரமப்பட்டனர். இன்னும் பல பகுதிகளில் குழாய் பதிக்க வேண்டி உள்ளது. இதை முழுவீச்சில் கவனத்துடன் அன்றன்றைக்கு மூடும் வகையில் செயல்படுத்த வேண்டும். தவறினால் விபத்து அபாயமே ஏற்படும்.