/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு
/
தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு
ADDED : ஜூன் 27, 2024 05:05 AM
அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் அலைபேசி கடை வைத்திருப்பவர் முகமது சம்சுதீன்,34, .
இவரிடம் ரயில்வே பீடர் ரோடு மேற்கு ரத வீதியை சேர்ந்த, தி.மு.க., கவுன்சிலரான கோகுல், தான் ஆடிட்டர் என்றும், கடை சம்பந்தமாக ஜி.எஸ்.டி., பதிவு செய்து பராமரித்து தருவதாக கூறி மாதம் 500 பெற்று, கணக்கில் குளறுபடி செய்து விட்டார்.
இதனால் ஜி.எஸ்.டி., அலுவலகத்தில் இருந்து சம்சுதீனுக்கு அபராதம் விதித்து கடிதம் வந்துள்ளது. தனக்கு மன உளைச்சலையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக அருப்புக்கோட்டை குற்றவியல் கோர்ட்டில் சம்சுதீன் கோகுல் மீது புகார் கொடுத்தார். கோர்ட்டு உத்தரவுப்படி டவுன் போலீசார் கோகுல் மீது வழக்கு பதிவு செய்தனர்.