/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கலெக்டர் அலுவலக பால பணிக்கு மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல் நால்வர் மீது வழக்கு

ADDED : மார் 03, 2025 07:15 AM

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலக நான்கு வழிச்சாலையில் பாலம் அமைக்கும் பணிக்காக கிராவல் மண்ணை அனுமதியின்றி அள்ளிய 3 டிராக்டர், ஒரு பொக்லைன் இயந்திரத்தை சூலக்கரை போலீசார் பறிமுதல் செய்து, 4 பேர் மீது வழக்கு பதிந்தனர்.
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் வழியாக செல்லும் நான்கு வழிச்சாலையில் பாலம் அமைக்கும் பணி ஜன. 3ல் துவங்கியது. இந்த பாலம் மாவட்ட மருந்து கோடவுனில் இருந்து துவங்கி ஆயுதப்படை வரை 700 மீட்டர் முதல் 800 மீட்டர் வரை அமைகிறது. தற்போது சர்வீஸ் ரோடுகளில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இப்பணிக்கு தேவையான கிராவல் மண்ணை விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திற்கு அருகே புல எண். 22ல் இருந்து அனுமதியின்றி ஒரு பொக்லைன் இயந்திரம் மூலம் 3 டிராக்டர்களில் மண் அள்ளியுள்ளனர். இதை அறிந்த வருவாய்துறையினர், போலீசார் இணைந்து ரோந்து சென்ற போது மண்ணை கொட்டி விட்டு வாகனங்களை அங்கேயே போட்டு விட்டு டிரைவர்கள் தப்பி ஓடினர்.
3 டிராக்டர்கள், பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெரிய மருளுத்து சேர்ந்த டிரைவர்கள் கம்பத்து ராஜா 24, கருப்பசாமி 35, அழகாபுரியைச் சேர்ந்த சுந்தர மூர்த்தி 44, அடையாளம் தெரியாத மற்றொருவர் ஆகிய 4 பேர் மீது சூலக்கரைப் போலீசார் வழக்கு பதிந்தனர்.