/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் மண்டல கராத்தே போட்டி
/
சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் மண்டல கராத்தே போட்டி
ADDED : செப் 11, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் விருதுநகர் மண்டல சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான கராத்தே போட்டி நடந்தது.
பள்ளி முதல்வர் சிவகுமார் தலைமை வகித்தார். துணை முதல்வர் பாண்டீஸ்வரி முன்னிலை வகித்தார். சபரி நேஷனல் பள்ளி முதல்வர் ஜேசு பிரகாஷ் மேற்பார்வையாளராக பணியாற்றினார்.
10 பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.