நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி: திருச்சுழி அருகே குலசேகர நல்லூர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு குறுவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடந்தது.
திருச்சுழி, ரெட்டியபட்டி, நரிக்குடி பகுதிகளைச் சேர்ந்த அரசு பள்ளிகளில் இருந்து 35க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. ஆலடிப்பட்டி ஊராட்சி தலைவர் செல்லம்மாள் துவக்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டிகளை நடத்தினர்.
19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் கல்லூரணி எஸ்.பி.கே., மேல்நிலைப்பள்ளி முதலிடமும், 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் உடையனம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி முதலிடம் பெற்று சாதனை படைத்தன.
வெற்றி பெற்ற அணிகளை தலைமை ஆசிரியர் லதா பாராட்டினார்.

