தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மக்கள் தொகை கணக்கெடுப்பு: சுயமாக விவரங்களை பதிவேற்றும்  பணி துவக்கம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு: சுயமாக விவரங்களை பதிவேற்றும்  பணி துவக்கம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு: சுயமாக விவரங்களை பதிவேற்றும்  பணி துவக்கம்


ADDED : ஜூலை 17, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:   விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கத்தை சுயமாக தன் விவரங்களை பதிவேற்றம் பணிகளை கலெக்டர் சுகபுத்ரா துவங்கி வைத்தார். 

   2027ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, 2 கட்டமாக நடக்கிறது. முதற்கட்டம் ஜூலை 17 முதல் 31 வரை சுயகணக்கெடுப்பு முறையிலும், 2ம் கட்டம் ஆக. 1 முதல் 31 வரை கள கணக்கெடுப்பாளர்கள் மூலமும் நடக்கும்.  இதற்காக 3000 கள பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

   இந்த சுய கணக்கெடுப்பின் மூலம் மக்களின் அடிப்படை வசதிகளான  கல்வி, வீடு, ரோடு,  வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த திட்டத்தையும் அதன் தேவையையும் அறிய இந்த சுய கணக்கெடுப்பு விவரங்கள் உதவுகின்றன. எனவே மக்கள் அனைவரும் தங்களின்  சுய விவரங்களை https://se.census.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தவுடன் 11 இலக்க கணக்கெடுப்பு குறிப்பு எண்  வழங்கப்படுகிறது.  இந்த எண்ணை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.  கணக்கெடுப்பாளர் உங்கள் வீட்டிற்கு வரும் போது அவரது அடையாள அட்டையை சரிபார்த்து, இந்த சுய கணக்கெடுப்பு குறிப்பு எண்ணை கணக்கெடுப்பாளரிடம் வழங்குவதன் மூலம், இணையத்தில் பதிவு செய்யப்பட்ட விவரங்களை அவர் சரிபார்த்து உறுதி செய்வார் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்தார்.

    மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் வருவாய்த்துறையினர், நகராட்சி ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.   டி.ஆர்.ஓ., ஆனந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்  பிர்தவுஸ் பாத்திமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us