/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆக்கிரமிப்பு அகற்றாமல் சென்டர் மீடியன்: விபத்தில் சிக்கும் மக்கள்
/
ஆக்கிரமிப்பு அகற்றாமல் சென்டர் மீடியன்: விபத்தில் சிக்கும் மக்கள்
ஆக்கிரமிப்பு அகற்றாமல் சென்டர் மீடியன்: விபத்தில் சிக்கும் மக்கள்
ஆக்கிரமிப்பு அகற்றாமல் சென்டர் மீடியன்: விபத்தில் சிக்கும் மக்கள்
ADDED : மே 26, 2024 03:43 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன்களால், வாகன ஓட்டிகள், மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
ராஜபாளையத்திலிருந்து சத்திரப்பட்டி வழியாக வெம்பக்கோட்டை மெயின் ரோடு அமைந்துள்ளது. ரயில்வே மேம்பாலத்தை அடுத்து 10ற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், பெரும் தொழிற்சாலைகள் இதனை அடுத்து சத்திரப்பட்டி வரை தொடர் குடியிருப்புகள் சிறு தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன் ரோட்டின் இரண்டு பக்கமும் இருந்த பழமையான புளிய மரங்கள் அகற்றி சாலை அகலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் எதிரெதிரே வரும் வாகனங்களை முறைப்படுத்தி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக சென்டர் மீடியன் அமைக்கும் பணி நடந்து முடிந்தது.
சாலையின் வடக்கு பகுதி வணிக நிறுவனங்கள் கடைகள் முன் மழைநீர் தேங்குவதை தவிர்க்க உயரத்தை அதிகப்படுத்தியுள்ளனர். அத்துடன் கடைகளின் விளம்பர அறிவிப்பு பலகைகளை ரோட்டை ஆக்கிரமித்து வைத்தும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான வகையில் நிறுத்த வசதி செய்யாமல் விட்டு வைத்துள்ளனர்.
இதனால் இப்பகுதி செல்லும் டூவீலர்கள், பாதசாரிகள், வாகன போக்குவரத்து மக்கள், மாணவர்கள் ஒதுங்க வழியின்றி விபத்தை சந்தித்து வருகின்றனர். போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை, உள்ளாட்சி இணைந்து ஆக்கிரமிப்புகளை நீக்கி பாதுகாப்பான பயணத்திற்கு வழி ஏற்படுத்த வேண்டும்.