/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மனநிறைவை தரும் மத்திய அரசின் திட்டங்கள் பா.ஜ., வேட்பாளர் ராதிகா பிரசாரம்
/
மனநிறைவை தரும் மத்திய அரசின் திட்டங்கள் பா.ஜ., வேட்பாளர் ராதிகா பிரசாரம்
மனநிறைவை தரும் மத்திய அரசின் திட்டங்கள் பா.ஜ., வேட்பாளர் ராதிகா பிரசாரம்
மனநிறைவை தரும் மத்திய அரசின் திட்டங்கள் பா.ஜ., வேட்பாளர் ராதிகா பிரசாரம்
ADDED : ஏப் 15, 2024 12:57 AM
விருதுநகர்,- மத்திய அரசு கொடுக்க கூடிய திட்டங்கள் மக்களுக்கு மனநிறைவை தருகின்றன, என விருதுநகரில் நடந்த பிரசாரத்தில் பா.ஜ., வேட்பாளர் ராதிகா பேசினார்.
விருதுநகர் ரோசல்பட்டி, ராமமூர்த்தி ரோடு, மேலத்தெரு, பர்மா காலனி, ஏ.டி.பி., காம்பவுண்ட், சத்திரரெட்டியபட்டி ஆகிய பகுதிகளில் பா.ஜ., வேட்பாளர் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: 10 ஆண்டுகளாக மத்திய அரசு கொடுக்க கூடிய திட்டங்கள் மக்களுக்கு மனநிறைவை தருகின்றன. எய்ம்ஸ், ஜவுளி பூங்கா, பட்டாசு ஆலைகளுக்கான பாதுகாப்பு, அம்மக்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதி காப்பது பா.ஜ., அரசு தான்.அதை செயல்படுத்துவது தான் எங்கள் வேலை. ஒரு பிரதிநிதியாக இருந்து மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வேன்.
தண்ணீர், ரோடு பிரச்னை போன்றவற்றை எல்லா சட்டசபைதொகுதிகளிலும் தெரிந்து வைத்துள்ளேன். எம்.பி., ஆனதும் நிச்சயம் தீர்ப்பேன். நாம் பிறரைகுறை கூறுவதை விட அவர்களை ஒதுக்கி வைத்து விடுவோம். நமக்கு வேலை நடக்க வேண்டும்.
இன்னொரு பக்கம் அ.தி.முக., தே.மு.தி.க., கூட்டணி யாருக்காக பிரசாரம் செய்கின்றனர் என்று தெரியவில்லை. அவர்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்றால் தெரியாது. நானோஜெயிக்கின்ற இடத்தில், செய்ய முடிகின்ற இடத்தில் நாங்கள் இருக்கிறோம், எவ்வளவோ நலத்திட்டங்கள் மத்திய அரசு செய்துள்ளது.
சிறப்பாக பணியாற்றவாய்ப்பு தாருங்கள். நான் இங்கேயே தான் இருப்பேன். 40 ஆண்டுகள் கலைத்துறையில் இருந்தேன். வரும் 5 ஆண்டுகள் உங்களுக்காக ஒதுக்கி வைத்துள்ளேன். உங்களுக்காக சிறப்பாக செயல்படுவேன், என்றார்.

