/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் -- கோவில்பட்டிக்கு இரவு நேரம் கூடுதல் டவுன் பஸ் தேவை
/
சாத்துார் -- கோவில்பட்டிக்கு இரவு நேரம் கூடுதல் டவுன் பஸ் தேவை
சாத்துார் -- கோவில்பட்டிக்கு இரவு நேரம் கூடுதல் டவுன் பஸ் தேவை
சாத்துார் -- கோவில்பட்டிக்கு இரவு நேரம் கூடுதல் டவுன் பஸ் தேவை
ADDED : ஏப் 26, 2024 01:02 AM
சாத்துார், ஏப். 26--
சாத்துார் - கோவில்பட்டிக்கு இரவு நேரத்தில் கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.
சாத்துார் கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் சடையம்பட்டி, சத்திரப்பட்டி, சின்ன ஓடைப்பட்டி, பெரிய ஓடைப்பட்டி, பெத்து ரொட்டி பட்டி, வள்ளி மில், என். சுப்பையாபுரம், உப்பத்தூர், நல்லி சத்திரம், நல்லி தொட்டிலோ வன்பட்டி, சிவனைந்தபுரம், என். வெங்கடேஸ்வராபுரம் என பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமத்தில் வசிக்கும் பலரும் சாத்துார் நகரில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர் .மேலும் பலர் சொந்தமாக கடைகளும் நடத்தி வருகின்றனர். இதேபோன்று கிராமப் பகுதியில் உள்ள அட்டை மில் கம்பெனி, கார்மெண்ட்ஸ் கம்பெனிகளில் சாத்தூரில் இருந்து பலர் வேலை நிமித்தமாக இந்தப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.
வேலை முடிந்து இரவு வீட்டிற்கு திரும்புபவர்களும் சாத்தூரில் பணி முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு செல்பவர்களும் சாத்துார் கோவில்பட்டி வழியாக செல்லும் டவுன் பஸ்சை நம்பியே உள்ளனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு செவ்வாய் ,வெள்ளி ,சனி ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இது போன்ற நாட்களில் சாத்துார் கோவில்பட்டி டவுன் பஸ்கள் இருக்கன்குடிக்கு இயக்கப்படுகின்றன.
இதனால் கோவில்பட்டி செல்லும் வழியில் உள்ள சிறிய கிராமங்களில் வசிப்பவர்கள் சாத்துாரில் இருந்து தங்கள் கிராமத்திற்கு செல்ல பஸ் வசதி இன்றி அவதிப்படும் நிலை உள்ளது.
டவுன் பஸ்கள் கிடைக்காத நிலையில் ஆட்டோக்களில் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர் .இதனால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இரவு நேரம் ஆட்டோவில் செல்வதற்கு பெண்கள் தயங்கும் நிலையும் உள்ளது.
எனவே இரவு நேரத்தில் சாத்துார் கோவில்பட்டி வழித்தடத்தில் கூடுதல் டவுன் பஸ்களை இயக்க வேண்டும் வழக்கமாக ஓடும் பஸ்களையும் இயக்க வேண்டும் வேறு ஊருக்கு மாற்றம் செய்யக் கூடாது என பொதுமக்கள் போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

