ராஜபாளையம் : ராஜபாளையம் தென்றல் நகர் விலக்கு பிரிவு ரோட்டில் அமைக்கப்பட்ட போலீஸ் செக் போஸ்ட் திறப்பு விழா நடந்தது.
ராஜபாளையம் மேற்கு பகுதியான முடங்கியார் ரோடு செண்பகத்தோப்பு ரோட்டில் ஆறுகள், வனப்பகுதி உள்ளன. இதிலிருந்து நகர் பகுதி தாலுகா அலுவலகம் வரை ஏராளமான குடியிருப்புகள் விவசாய நிலங்கள் அமைந்துள்ளது.
இந்நிலையில் இங்கு அடிக்கடி நடைபெறும் வழிப்பறி, தகராறு, மண் கடத்தல் உள்ளிட்ட குற்ற செயல்களை தடுக்கும் விதமாக போலீஸ் செக் போஸ்ட் அமைத்து கண்காணிக்க வேண்டும் என குடியிருப்பு நல சங்கத்தினர் பல்வேறு சமுதாயத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இதனை அடுத்து இப்பகுதியை கண்காணிக்கும் வகையில் போலீஸ் செக் போஸ்ட் கூண்டினை டி.எஸ்.பி., ப்ரீத்தி ரிப்பன் வெட்டி துவக்கினார். அவசர காலத்திலும் காலை, மாலை நெரிசல் நேரங்களிலும் போலீசார் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

