/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோவில் திருவிழாக்களில் நகை திருடிய சென்னை தம்பதி கைது; கார் பறிமுதல்
/
கோவில் திருவிழாக்களில் நகை திருடிய சென்னை தம்பதி கைது; கார் பறிமுதல்
கோவில் திருவிழாக்களில் நகை திருடிய சென்னை தம்பதி கைது; கார் பறிமுதல்
கோவில் திருவிழாக்களில் நகை திருடிய சென்னை தம்பதி கைது; கார் பறிமுதல்
ADDED : செப் 04, 2024 01:37 AM

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆக., 7ல் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தின் போது, முண்டியடித்து லட்டு வாங்கிய, ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ஐந்து பெண்களிடம், 18 சவரன் தங்க சங்கிலிகள் திருடப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்துார் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர். அதே போல, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் நடந்த சங்கரநாராயணன் கோவில் கும்பாபிஷேகத்திலும், ஆறு பெண்களிடம் 16 சவரன் தங்க சங்கிலிகள் பறிக்கபட்டுள்ளன.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக, சென்னை, தாம்பரம் மணிமங்கலத்தைச் சேர்ந்த அஜித், 29, அவரது மனைவி அனு, 26, ஆகியோரை பிடித்து ஸ்ரீவில்லிபுத்துார் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், ஸ்ரீவில்லிபுத்துார், சங்கரன்கோவில் மட்டுமின்றி பல ஆண்டுகளாக தர்மபுரி, சென்னை கேளம்பாக்கம், தாழம்பூர், காஞ்சிபுரம் சாலவாக்கம் நகரங்களில் கோவில் திருவிழா கூட்டங்களை பயன்படுத்தி நகை திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
தற்போது, அவர்கள் கேரளா மாநிலம் பாலக்காட்டில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர பங்களாவில் வசித்து வருவதும், சில மாதங்களுக்கு முன் புதிய கார் வாங்கி, அதில் கோவில் திருவிழாவிற்கு சென்று நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது.
டி.எஸ்.பி., ராஜா, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், இருவரையும் கைது செய்து, காரையும் 18 சவரன் நகைகளையும் மீட்டனர்.