/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கஞ்சநாயக்கன்பட்டியில் மக்களுடன் முதல்வர் முகாம்
/
கஞ்சநாயக்கன்பட்டியில் மக்களுடன் முதல்வர் முகாம்
ADDED : ஜூலை 17, 2024 12:10 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நலத்திட்ட உதவிகளை வழங்கி முகாமை துவக்கி வைத்து பேசியதாவது: மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் முதல்வர் பார்த்து பார்த்து செய்து வருகிறார். விருதுநகரில் 29 புதிய அரசு பஸ்கள் விடப்பட்டுள்ளது.
நமது முதல்வர் 4 ஆயிரம் கோடி புதிய ரோடுகள் அமைக்க நிதி ஒதுக்கி உள்ளார். கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளார் என, பேசினார். முகாமில் ஆர்.டி.ஓ., வள்ளிகண்ணு உட்பட பிற துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். துறைகளின் கண்காட்சி நடந்தது. - -