/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெற்றோருக்கு விழிப்புணர்வு இல்லாததால் சிறுவர்கள் டூவீலர்கள் ஓட்டுவது அதிகரிப்பு
/
பெற்றோருக்கு விழிப்புணர்வு இல்லாததால் சிறுவர்கள் டூவீலர்கள் ஓட்டுவது அதிகரிப்பு
பெற்றோருக்கு விழிப்புணர்வு இல்லாததால் சிறுவர்கள் டூவீலர்கள் ஓட்டுவது அதிகரிப்பு
பெற்றோருக்கு விழிப்புணர்வு இல்லாததால் சிறுவர்கள் டூவீலர்கள் ஓட்டுவது அதிகரிப்பு
ADDED : ஜூலை 04, 2024 12:50 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சிறுவர்கள் டூவீலர்களை ஓட்டி வருவது அதிகரித்துள்ளது. பள்ளி விட்ட முன்பும், காலை நேரங்களில் கடைகளுக்கு செல்வதற்காக மொபட் போன்ற சிறிய ரக டூவீலர்களில் வலம் வருகின்றனர். பெற்றோரிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், அலட்சிய காரணங்களாலும் இவர்கள் விபத்திலும் சிக்குகின்றனர்.
மாவட்டத்தில் 15, 16, 17 வயதை நெருங்கும் சிறுவர்கள் ஆர்வ மிகுதியால் வீட்டில் இருக்கும் டூவீலர்களை ஓட்ட கற்று கொள்கின்றனர். போதிய விதிமுறைகள் எதுவும் தெரியாத நிலையில் ரோடுகளில் குறுக்கே வந்து வாகனங்களில் செல்லும் பிறருக்கு பாதிப்பை தருகின்றனர்.
18 வயது தான் ஓட்டுனர் உரிமம் எடுப்பதற்கான வயது. அந்த வயதில் தான் ஆர்வ கோளாறு குறைந்து சிக்னல்களை மதிப்பது, எச்சரிக்கை விடுத்து கிராஸ் செய்வது, எச்சரிக்கை பலகைகளை கண்டறிவதற்கான தெளிவும், புரிதலும் வரும்.
மேலும் இந்த வயதில் கல்லுாரிக்கு வேறு செல்வதால் சிறிது பக்குவமும் ஏற்படும். இந்நிலையில் பலர் ஆர்வக்கோளாறு காரணமாக முன்பே டூவீலர் ஓட்ட கற்று கொள்கின்றனர். இதை பெற்றோரும் அனுமதிக்கின்றனர்.
குறிப்பாக இவ்வாறு பழகும் சிறுவர்களுக்கு சரிவர கிராஸ் செய்ய தெரியாது, முந்தி செல்வது பற்றி தெரியாது, இன்டிகேட்டரைபயன்படுத்தி திருப்புவது தெரியாது. இவ்வாறு டூவீலர் ஓட்டும் போது அவர்கள் செய்யும் சிறிய தவறு அவர்கள் உயிரை பலியாய் கேட்கிறது.
தினசரி சிறுவர்கள் வாகனங்களை இயக்கி காயப்படுவதும் நிறைய உள்ளது. இதை யாருமே கண்டு கொள்வதே கிடையாது. பெற்றோரின் அலட்சியமே இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுவர்கள் வாகனங்களை இயக்கினால் பெற்றோரின் வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என அரசு அறிவித்திருந்தது.
ஆனால் எந்த பெற்றோரும் இதற்காக அஞ்சுவதாக தெரியவில்லை. சோதனை கெடுபிடிகளும் பெரிதாக இல்லை. இதனால் நாளுக்கு நாள் சிறுவர்கள்வாகனங்களை இயக்குவது அதிகரித்துள்ளது.
இதில் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடாக பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வை அதிகப்படுத்துவது தான் உள்ளது.மாணவர்கள் மத்தியில் தேவையான விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும். சிறுவர்கள் வாகனங்களை இயக்குவதை கண்டறிந்தால் போலீசார் பெற்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.