ADDED : மே 10, 2024 11:57 PM

விருதுநகர் : விருதுநகர் கன்னிச்சேரிபுதுார் சவேரியார் சர்ச் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிவகாசி லுார்து அன்னை சர்ச் பாதிரியார் ஜான் மார்ட்டின், ஆர்.ஆர்.நகர் பாதிரியார் பீட்டர் ராய், உதவி பாதிரியார் பிரேம் ஜான்சன், அருள்தாஸ், பங்கு இறைமக்கள் முன்னிலையில் சவேரியார் உருவம் பொறித்த கொடியை ஏற்றி வைத்து திருவிழாவை துவங்கினர்.
அதை தொடர்ந்து திருப்பலியும், மறையுரையும் நடந்தது. திருவிழா நாட்களில் தினசரி மாலையில் ஜெப வழிபாடுகளும், நவநாள் திருப்பலியும், மறையுரையும் நடக்கிறது. மே 12ல் விண்ணேற்பு பெருவிழா, 13ல் பாத்திமா அன்னை திருவிழா, முக்கிய நிகழ்வான தேர்பவனி மே 18ல் நடக்கிறது.
ஏற்பாடுகளை பாதிரியார்பீட்டர் ராய், உதவி பாதிரியார் பிரேம் ஜான்சன், அருள்தாஸ், கன்னிசேரிபுதுார் கன்னியாஸ்திரிகள், பங்கு இறைமக்கள் செய்கின்றனர்.