
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் இஞ்ஞாசியார் சர்ச்சில் பெருவிழா கொடியேற்றம் நடந்தது.
பாதிரியார் ஜோசப் மைக்கேல் செல்வராஜ் தலைமையில் கொடியேற்றப்பட்டு திருப்பலி, மறையுரை நடந்தது. பாதிரியார்கள் அருள்ராயன், தேவராஜ் பங்கேற்றனர்.
தினசரி திருப்பலியும், மறையுரையும் நடக்க உள்ளது. 9ம் நாள் தேர் பவனியும், 11ம் நாள் நற்கருணை பவனியும் நடக்கிறது. ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள் செய்கின்றனர்.

