நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்:
ராஜபாளையத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டக் கிளை மாநாடு நடந்தது. துணைத் தலைவர் குருசாமி வரவேற்றார். வட்டத் தலைவர் ஜெகஜோதி ராமலிங்கம் தலைமை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர்களை சத்துணவு ஊழியர் சங்கம் கணபதி கிளைத்தலைவர் வேல்முருகன், மாவட்ட இணை செயலாளர் பாண்டியராஜன் வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் தேர்தல் கால வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
சத்துணவு அங்கன்வாடி நகராட்சி நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இணை செயலாளர் ராஜாராம் நன்றி கூறினார்.