ADDED : ஜூலை 31, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியில் துாய்மைக் காவலர்களை வீடு, வீடாக குப்பை சேகரிக்கும் பணியைச் செய்ய விடாமல் ரோட்டோரங்களில் குப்பை அள்ளுதல், கட்டடப் பணி செய்ய நிர்பந்தம் என ஈடுபடுத்திய ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சி.ஐ.டி.யு., ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முடிவில் அனைத்து முறைகேடுகளும் தடுக்கப்படும், பணித்தள பொறுப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். பின் கலைந்து சென்றனர். மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் நகரச் செயலாளர் ஜெயபாரத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
