ADDED : ஜூலை 31, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் துாய்மை பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, தலைக்காய சிகிச்சை பிரிவை துவங்குவது, மருத்துவமனை கேண்டீன்களை அனுமதிக்கப்பட்ட 300 சதுர அடி அளவில் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சி மக்கள் போராட்ட குழு விருதுநகர் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தது. மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமை வகித்தார். இ.கம்யூ மாநில குழு உறுப்பினர் பால முருகன், காங்.
நிர்வாகி எட்வர்டு முன்னிலை வகித்தனர். தமிழ் புலிகள் கட்சி, தலித் விடுதலை இயக்கம், தி.க., உள்ளிட்ட அமைப்பினர் பங்கேற்றனர்.
