ADDED : ஜூலை 31, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை, ஆக. 1-
அருப்புக்கோட்டை சப் டிரஸரி அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர்
அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் அறிவிக்கப்பட்டதில் பல்வேறு குறைபாடுகளை களைந்து திருத்தம் செய்வது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் சோலை பாப்பன் தலைமை வகித்தார். மாநில பேரவை உறுப்பினர் மணி பாண்டியன், செயற்குழு உறுப்பினர் முனியாண்டி, மாவட்ட இணைச்செயலாளர் ராமராஜ் முன்னிலை வகித்தனர். மாநில இணை செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் பேசினார்.
சங்க நிர்வாகிகள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
___
படம் உள்ளது
