நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்:
ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் ரோட்டரி சங்கம், மங்காபுரம் ஹிந்து மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் இணைந்து தரகுமலை மாதா கோவிலில், அடிவாரம் முதல் மலை வரை துாய்மைப்பணி செய்தனர்.
சங்கத் தலைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார். ரோட்டரி நிர்வாகி முத்துராமலிங்க்குமார், செயலாளர் சின்னத்தம்பி, பொருளாளர் முத்துவேல் ராஜா, ஆசிரியர்கள் அழகு நம்பிராஜன், சுந்தரமகாலிங்கம், மாணவர்கள் குழுவினர் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி மலைப் பாதையை சுத்தம் செய்தனர்.

