/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரியில் தூய்மை பணி: 2 டன் கழிவுகள் அகற்றம்
/
சதுரகிரியில் தூய்மை பணி: 2 டன் கழிவுகள் அகற்றம்
ADDED : ஆக 18, 2024 04:45 AM
வத்திராயிருப்பு : சதுரகிரியில் அடிவாரம் முதல் கோயில் வரை நடந்த தூய்மை பணியில் 2 டன் எடையுள்ள மக்காத கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் தெரிவித்துள்ளது.
கோயிலில் ஆக. 1 முதல் 5 வரை ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் வனத்துறையினர், தாணிப்பாறை சூழல் மேம்பாட்டு குழு உறுப்பினர்கள், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் குழுவினர் சதுரகிரியில் அடிவாரம் முதல் கோயில் வரை தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
இதில் குளிர்பான பாட்டில்கள், பாலிதீன்பைகள் மற்றும் எளிதில் மக்காத குப்பை சுமார் 2 டன் அளவில் சேகரித்து அடிவாரத்திற்கு கொண்டுவரப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டதாக புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.

