/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பு அகற்றி வாறுகால் கட்டுங்கள்
/
ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பு அகற்றி வாறுகால் கட்டுங்கள்
ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பு அகற்றி வாறுகால் கட்டுங்கள்
ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பு அகற்றி வாறுகால் கட்டுங்கள்
ADDED : செப் 01, 2024 04:50 AM
அருப்புக்கோட்டை, : ரோடு ஓரங்களில் உள்ள வாறுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள், புதிய வாறுகால் கட்டி பயன் இல்லை என, நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் அறிவுறுத்தினார்.
அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பழனிச்சாமி, நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கம், பொறியாளர் அபுபக்கர் சித்திக், கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்
பாலசுப்பிரமணியன், (மார்க்சிஸ்ட்): சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் திருநகரம் பகுதியில் வெள்ள சேதம் ஆனது. பலமுறை தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை.ரோடு ஓரங்களில் உள்ள வாறுகால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். பலமுறை சொல்லியும் நடவடிக்கை இல்லை. புதிய வாறுகால்களை அமைப்பதில் எந்த பலனும் இல்லை. தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளீர்கள் ஏன்.
ராமதிலகம், (அ.தி.மு.க.,): பட்டாபி ராமர் கோயில் பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும். பந்தல்குடி ரோடு சந்திப்பின் ஹைமாஸ் லைட் போட வேண்டும்.
கவிதா, (தி.மு.க.,): எனது 19 வது வார்டில் ரோடு போட டெண்டர் விட்டு ஒரு ஆண்டு ஆகியும் பணி நடக்கவில்லை. ஒப்பந்தகாரரும் பதில் சொல்வது இல்லை. டெண்டரை ரத்து செய்து வேறு ஒப்பந்தக்காரர்களிடம் பணியை கொடுங்கள். எனது வார்டில் எந்த பணியும் நடப்பது இல்லை. எனது வார்டை கண்டு கொள்வது இல்லை.
மீனாட்சி, (தி.மு.க.,): நகராட்சி மூலம் போடப்படும் எல்.இ.டி., தெருவிளக்குகள் வெளிச்சம் வருவது இல்லை. சிறிய மழை பெய்தால் கூட விளக்கு பழுதாகி விடுகிறது. தரமான விளக்குகள் போடுங்கள். எனது 15 வது வார்டில் உள்ள ஒரு தெருவில் உள்ள வீட்டில் குடிநீர் இணைப்பு இல்லை. அவர்களுக்கு குடிநீர் வரி பில் வருகிறது.
முருகானந்தம், (பா.ஜ.,): சொக்கலிங்கபுரம் சொக்கநாதர் கோயில் தெப்பக்குளம் பணி அரைகுறையாக நிற்கிறது. வருவாய்த்துறை அமைச்சர் 80 லட்சம் நிதி செலவில் நடைபாதை, சிசிடிவி., கேமரா, மின் விளக்குகள் பொருத்தப்படும் என கூறி பணியை துவக்கி வைத்தார். ஆனால் எந்தப் பணியும் நடக்கவில்லை.
இவ்வாறு விவாதங்கள் நடந்தது.